வருகிறது அக்னி நட்சத்திரம்! பாதுக்காத்துக்கொள்ள சில டிப்ஸ்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கிறது. 

Last Updated : May 3, 2018, 02:43 PM IST
வருகிறது அக்னி நட்சத்திரம்! பாதுக்காத்துக்கொள்ள சில டிப்ஸ்! title=

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கிறது. 

இந்த அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. நாளை முதல் அக்னி நட்சத்திரமும் ஆரம்பிக்க இருப்பதால் வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும். 

இந்நிலையில் இந்த கத்திரி வெயிலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள எளிமையான இயற்கை வழிகள் இதோ உங்களுக்காக:-

>  அக்னி நட்சத்திர காலத்தில் தொடர்ந்து 25 நாட்கள் வெப்பத்தால் நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

> வெயிலில் அலைவதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.

> கோடைகாலத்தில் அதிக தண்ணீர் குடிப்பது, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

> வெயில் காலத்தில் திட உணவை காட்டிலும் திரவ வகை உணவுகளை அதிகளவில் சேர்க்க வேண்டும்.

> இளநீர், நுங்கு, பதநீர், மோர் அதிகளவில் பருக வேண்டும். 

Trending News