1.4ஜிபி தரவுடன் ஹெல்லோ டியூன் இலவசம்!! ஏர்டெல் புதிய சலுகை!!

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 27, 2018, 01:49 PM IST
1.4ஜிபி தரவுடன் ஹெல்லோ டியூன் இலவசம்!! ஏர்டெல் புதிய சலுகை!! title=

தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டெலிகாம் நிறுவனங்கள் தினத்தோறும் புதிய சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன.

ஜியோ-வை மிஞ்சும் ஏர்டெல்-ன் ரூ.49 திட்டம்!!

அந்தவகையில், ஏர்டெல் நிறுவனம் 219 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலிகை பற்றி பார்ப்போம்.

ரூ.219/-

3ஜி/4ஜி வேகத்தில் தினமும் 1.4ஜிபி தரவை வழங்கப்படுகிறது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

அன்லிமிடெட் ஹெல்லோ டியூன்கள் வழங்கப்படுகிறது

இந்த சலிகை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை பெற விரும்பும் ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் 'மைஏர்டெல்' செயலியை பயன்பாடுத்தி அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்நுழைந்து ரீ-சார்ஜ் செய்து கொள்ளவும்.

Reliance Jio-ன் சலுகை விற்பனையில் வருகிறது Apple Watch!

Trending News