சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர முதல்வர் உண்ணாவிரதம் முடிவுற்றது!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டதை தற்போது முடித்து கொண்டார்.

Last Updated : Apr 20, 2018, 07:36 PM IST
சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர முதல்வர் உண்ணாவிரதம் முடிவுற்றது! title=

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டதை தற்போது முடித்து கொண்டார். 

ஆந்திரா-வுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும், அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. 

அதைத் தொடர்ந்து ஆந்திர கட்சித்தலைவர்கள் தொடர் போராட்டத்த்தில் ஈடுப்பபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அவரது பிறந்தநாளான இன்று ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த்து கோரி உண்ணவிரதம் மோற்கொண்டார்.

இது குறித்து முன்னதாக அவர் தெரிவித்துள்ளதாவது... முறையான திட்டம் வகுக்காமல் ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்த காரணத்தினால் தற்போது ஆந்திர மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். மத்திய அரசு தொடர்ந்து ஆந்திரா மீது அலட்சிய போக்கை காட்டி வருகிறது.

இதில் எதிர்க்கட்சிகள் சுய லாபத்திற்காக அரசியல் செய்கின்றன. ஆளும் பாஜக அரசின் நம்பிக்கை துரோகத்தை கண்டித்தும் மாநில பிரிவினை மசோதாவில் அறிவித்த 19 அம்சங்களை அமல்படுத்த கோரியும் தனது உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக அறிவித்திறுந்தார். அதன்படி இன்று அவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இந்நிலையில், தற்போது அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். 

 

Trending News