இந்தோனேஷி தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்குதல்-4 பேர் பலி: 16 பேர் படுகாயம்!

இந்தோனேஷியாவில் 3 தேவாலயங்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 16 பேர் படுகாயம் காயம் அடைந்துள்ளனர்!   

Updated: May 13, 2018, 10:33 AM IST
இந்தோனேஷி தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்குதல்-4 பேர் பலி: 16 பேர் படுகாயம்!

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சுரபயா என்ற பகுதியில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பெரிய இஸ்லாமிய நாடான இதில் மற்ற மதத்தினரும் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். 

இந்த பகுதியில் உள்ள சுரபயா நகரில் கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயங்கள் அதி அளவில் அமைந்துள்ளன. இந்த இடத்தில் உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக வந்த தீவிரவாதிகள், 3 தேவாலயங்களை இலக்காக கொண்டு அவற்றின் மீது தொடர்ச்சியாக 10 நிமிட இடைவேளையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். 

இதில், முதல் தாக்குதல் காலை 7.30 மணியளவில் நடந்தது. அவற்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் ஒன்றும் அடங்கும். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி ஆகியுள்ளார். தாக்குதலால் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களில் 2 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close