இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை!

வெயில் காலத்தில் அனைவரின் நினைவிற்கும் வருவது இளநீர். மனித குலத்துக்கு இயற்கை தந்த ஒரு அருமையான பொக்கிஷம் தான் இளநீர். எந்த விதமான கலப்படமும் இல்லாத சுத்தமான சுவையான பானம்.

Updated: Apr 14, 2018, 04:49 PM IST
இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை!
ZeeNewsTamil

கோடை வெயில் வெளுத்து வாங்க ஆரம்பித்தா நிலையில், முதியவர் முதல் குழந்தைகள் வரை எல்லாரும் பாதிக்கபடுவது இயல்பு. எனவே, கோடை காலத்தில் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் ஆடை வரி அனைத்தையும் நாம் பார்த்து பார்த்து பண்ண வேண்டிய நிலை உள்ளது. இவற்றில் நாம் கவனம் செலுத்தினாலே கோடையில் வரும் பல பிரச்சனைகளை நாம் தடுக்க முடியும். 

கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி அதிகமாக பழங்கள் மற்றும் தண்ணீர் குடிப்பது தான். வெயில் காலத்தில் அனைவரின் நினைவிற்கும் வருவது இளநீர். மனித குலத்துக்கு இயற்கை தந்த ஒரு அருமையான பொக்கிஷம் தான் இளநீர். எந்த விதமான கலப்படமும் இல்லாத சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன.

இளநீரில் உள்ள மருத்துவ குணங்கள்..! 

> இளநீரில் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

> ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

> இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

> இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

> இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

முக்கிய குறிப்பு....! 

இளநீரை வெறும் வயிற்றில் எப்போதும் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது..! 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close