EPF Withdrawal Rules: EPF தொகையில் அட்வான்சாக பணம் பெற முடியுமா? வழிமுறைகள் என்ன?

EPFO Advances: வாழ்வில் அவசர அல்லது எதிர்பாராத செலவுகளை எதிகொள்ளும் போது, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) முன்பணம் (அட்வான்ஸ்), பெரிய வகையில் உதவுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2023, 08:39 PM IST
  • திருமணத்திற்கான இபிஎஃப் அட்வான்ஸ்.
  • இதை எப்போது பெற முடியும்?
  • எவ்வளவு தொகை கிடைக்கும்?
EPF Withdrawal Rules: EPF தொகையில் அட்வான்சாக பணம் பெற முடியுமா? வழிமுறைகள் என்ன? title=

EPF Withdrawal Rules / EPF Advances: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. அலுவலக பணிகளில் இருக்கும் பெரும்பான்மையானோருக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இபிஎஃப் கணக்கில் பங்களிக்கப்படுகின்றது. பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது. 

பொதுவாக, வாழ்வில் அவசர அல்லது எதிர்பாராத செலவுகளை எதிகொள்ளும் போது, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) முன்பணம் (அட்வான்ஸ்), பெரிய வகையில் உதவுகிறது. ஆனால், இந்த முன்பணத்தை மொத்தமான ஒரே நேரத்தில் திரும்ப இபிஎஃப் கணக்கில் செலுத்த முடியாது என்பதால், இபிஎஃப் அட்வான்சுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் உறுப்பினர்கள் தங்கள் தேவைகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

இபிஎஃப் முன்பணத்திற்கு (EPF Advances) விண்ணப்பிக்க, பிஎஃப் உறுப்பினர் படிவம் 31ஐ தங்கள் முதலாளி / நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். முதலாளி / நிறுவனம் மூலம் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, ஒப்புதலுக்காக இபிஎஃப்ஓ (EPFO) -க்கு சமர்ப்பிக்கப்படும். ஒப்புதல் கிடைத்ததும், முன்பணம் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக அட்வான்ஸ் பெறலாம், அவை:

- மருத்துவ அவசரம்
- கல்வி
- திருமணம்
- நிலம் / வீடு வாங்குதல்
- வீடு புதுப்பித்தல்
- வேலையின்மை

உறுப்பினர் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருந்த பின்னர் இபிஎஃப் திருமண முன்பண வசதியைப் பெறலாம்.

திருமணத்திற்கான இபிஎஃப் அட்வான்ஸ் (EPF Advance For Marriage)

இதை எப்போது பெற முடியும்? 

- இபிஎஃப் உறுப்பினரின் திருமணம்
- உறுப்பினர்ன் மகன்/மகளின் திருமணம்
- உறுப்பினரின் சகோதரன்/சகோதரியின் திருமணம்

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான ட்விஸ்ட்: 50% டிஏ, ஊதியத்தில் அதிரடி ஏற்றம்

எவ்வளவு தொகை கிடைக்கும்?

- வட்டியுடன் சொந்த பங்கின் 50% வரை கிடைக்கும்.

இதற்கான நிபந்தனைகள் என்ன?

- இபிஎஃஓ -வில் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்

- திருமணம் மற்றும் கல்விக்காக மூன்று அட்வான்சுகளுக்கு மேல் பெற முடியாது

இபிஎஃப் (EPF) நிதியிலிருந்து பணத்தை எடுப்பது குறிப்பிட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதையும், எடுக்கும் தொகையானது உறுப்பினர் பணத்தை எடுக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இபிஎஃப் அட்வான்ஸ்கள் ஊழியர்களின் குறிப்பிட்ட நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய பயன்படுகின்றன. மேலும் இபிஎஃப்ஓ (EPFO) அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தொடர்ந்து புதுப்பிக்கிறது. பிஎஃப் உறுப்பினர்கள் இதை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இபிஎஃப்ஓ இணையதளத்தில் சமீபத்திய வழிகாட்டுதல்களை பார்க்கலாம். அல்லது துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவல்களைப் பெற அவர்களது நிறுவனம் அல்லது இபிஎஃப்ஓ அலுவலகத்துடன் கலந்தாலோசிப்பது நல்லது.

இந்தியாவில் இபிஎஃப் ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக உள்ளது. இது ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இபிஎஃப் திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மொத்த தொகை திரும்பப் பெறுதல் போன்ற ஓய்வூதிய பலன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8% வட்டி கொடுக்கும் வங்கிகளின் சிறப்பு FD... அக். 31 வரை மட்டுமே வாய்ப்பு..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News