CBSE +2 ரிசல்ட் இன்று! சில முக்கிய குறிப்புகள் உள்ளே!

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என CBSE நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Last Updated : May 26, 2018, 09:37 AM IST
CBSE +2 ரிசல்ட் இன்று! சில முக்கிய குறிப்புகள் உள்ளே! title=

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என CBSE நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. கேள்வித்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு Economics தேர்வு ஏப்ரல் 25-ம் நாள் மீண்டும் நடைபெற்றது. இந்த CBSE 12-ம் வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 138 மையங்களில் எழுதினார்கள். மேலும் தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரத்து 500 பேர் எழுதினர்.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலர், அனில் ஸ்வரூப் தன், தனது 'டிவிட்டர்' பக்கத்தில், CBSE  தேர்வு முடிவு இன்று வெளியாகும்' என, குறிப்பிட்டுள்ளார். 

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று! சில முக்கிய குறிப்புகள்!!

CBSE பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 

தேர்வு முடிவு விபரங்களை, www.cbse.nic.in மற்றும் www.cbseresults.nic.in என்ற, இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் CBSE 12-ம் வகுப்பு முடிவுகளை பார்க்கலாம்.

CBSE பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாகவும் பார்க்கலாம்.

எஸ்எம்எஸ் மூலம் பார்க்க எண்:- 

Type 'cbse12' and send it to mobile number - 7738299899

தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

cbse.nic.in cbseresults.nic.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் CBSE Class 12 Result 2018 கிளிக் செய்யவும்.
கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.

Trending News