திருத்தப்பட்ட வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தது மத்தியஅரசு!

காவிரி விவகாராத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தினை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது!

Last Updated : May 17, 2018, 01:49 PM IST
திருத்தப்பட்ட வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தது மத்தியஅரசு! title=

காவிரி விவகாராத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தினை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது!

நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த மே-14 அன்று, உச்சநீதிமன்றத்தில் காவிரி வாரியம் குறித்த வரைவு திட்டத்தினை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனையடுத்து தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தரப்பில், மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் குறித்த கருத்துகள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் AM கன்வில்கர், TY சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட திட்டத்தில் சில பிரிவுகளில் திருத்தங்களை செய்து, புதிய வரைவு அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தினை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தாக்கல் செய்தார். அமைப்பின் பெயர், அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படும் இடம் மற்றும் முடிவை செயல்படுத்துவதில் அமைப்புக்கு இருக்கும் அதிகாரம் ஆகிய பிரிவுகளில் திருத்தங்களை செய்து, புதிய வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட வரைவுத் திட்டத்தில், காவிரி அமைப்புக்கு "காவிரி நீர் மேலாண்மை ஆணையம்" என பெயரிடப்பட்டுள்ளத. இந்த திருத்தப்பட்ட வரைவு திட்டத்தின் மீதான தீர்ப்பு நாளை மாலை 4 மணியளவில் வழங்கப்படும் எனவும், தவறும்பட்சத்தில் வரும் மே 22, 23 தேதிகளில் வழங்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News