இணையதள முடக்கத்தை எதிர்த்து முறையீடு மனு!

தூத்துக்குடி, குமரி, நெல்லையில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு மனு தாக்கல்! 

Last Updated : May 24, 2018, 12:21 PM IST
இணையதள முடக்கத்தை எதிர்த்து முறையீடு மனு!  title=

தூத்துக்குடி, குமரி, நெல்லையில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு மனு தாக்கல்! 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட காவல்துறையினரின் தடியடி, துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் எரிப்பு ஆகிய காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் மூலம் உடனடியாக பரவி வருகின்றன. 

இதனால் போராட்டம் தொடர்பாக தவறான வதந்திகள் இணையத்தில் பரவி வன்முறை வெடிக்கும் என கருதி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசு, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையதள சேவையை சுமார் ஐந்து நாட்களுக்கு இணைய சேவையை முடக்கியுள்ளது. மொபைல் போன்களிலும் இணைய சேவையை முடக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மொபைல், தொலைப்பேசிகளில் குரல் சேவை மட்டும் கிடைக்கும் என அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இணையதள  முடக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷம் என்பவர் முறையீடு செய்து உள்ளார். அவர் தனது முறையீட்டில்   துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்து உள்ளார்.

சூரியபிரகாஷம் முறையீட்டை  அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணை நடத்தப்படுகிறது. 

 

Trending News