இன்றைய (14-11-2018) உங்கள் ராசிபலன் பார்க்க!!

புதன்கிழமையான இன்றைய உங்கள் நாள் எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள... ராசிபலன்- பார்க்க!!

Last Updated : Nov 14, 2018, 08:37 AM IST
இன்றைய (14-11-2018) உங்கள் ராசிபலன் பார்க்க!! title=

மேஷம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.  கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான  ஆடை அணிகலன்களை  வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்:
இன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மிதுனம்:
இன்று விருப்பங்கள் கைகூடும்.  மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கடகம்:
இன்று எதிர்பாலினத்தாரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி:
இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள்  மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

துலாம்:
இன்று எல்லா வகையிலும் நற்பலனே ஏற்படும்.  புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும்  செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

விருச்சிகம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:
இன்று குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:
இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். பணியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்:
இன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.  எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மீனம்:
இன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. 
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Trending News