தனது வாசகர்களை புதிய முறையில் கவர்ந்த DNA செய்தித்தாள்..!

டி.என்.ஏ செய்தித்தாள் ஆக்மெண்டேட் ரியாலிட்டி என புதிய உத்தியை பயன்படுத்தி பயன்படுத்தி விளம்பரம் மூலம் புதிய முறையை வாசகர்களுக்கு அறிமுகபடுத்தியுள்ளது!

Updated: Apr 16, 2018, 08:44 PM IST
தனது வாசகர்களை புதிய முறையில் கவர்ந்த DNA செய்தித்தாள்..!

டி.என்.ஏ செய்தித்தாள் தங்களது மும்பை பதிப்பில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது, இதன் மூலம் வாசகர்கள் அதில் உள்ள படங்களை வீடியோவாக மொபைலில் பார்க்க முடிந்ததாம்.

 தனது வாசகர்களை ஈர்க்கும் வகையில் டி.என்.ஏ செய்தித்தாள் ஆக்மெண்டேட் ரியாலிட்டி (Augmented Reality) செயலிக்கான விளம்பரத்தை செய்தித்தாள் மூலம் கொண்டு சேர்த்துள்ளது. இது செய்தித்தாளிலேயே தங்களின் கைபேசி மூலம் ஸ்கேன் செய்யும் ஊக்கம் ஆகும். இந்த தொழிற்நுட்பத்தை டி.என்.ஏ செய்தித்தாள் விளம்பரம் மூலம் தங்களின் பாரவியாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு பயனுள்ளவகையில் கொண்டு சேர்த்துள்ளது. 

இந்த விளம்பரத்தில் ஒரு பர்கோடு போன்ற ஒரு கொடு இருக்கும் அதை நாம் கைபேசியில் ஸ்கேன் செய்தால் அந்த செய்திகளை நாம் வீடியோ வடிவில் பார்க்கலாம். இந்த முறையை முதல் முறையாக வெளியிட்டுள்ளது டி.என்.ஏ செய்தி நிறுவனம்.

இதை பற்றி டி.என்.ஏ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சஞ்சிவ் கார்க் கூறுகையில்.....! 

"நாங்கள் எப்பொழுதும் ஒரு புதுமை உந்துதல் அமைப்பாக இருந்து வந்துள்ளோம், இது வாசகர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் நல்ல நம்பிக்கையும் மதிப்பைக் கொண்டுவருவதற்கு உதவுகிறது. அச்சு மற்றும் டிஜிட்டல் இணைப்பதற்கான யோசனை புதிய வயது நுகர்வோர் மற்றும் நம் பங்காளர்களுக்கும் இடையேயான இடைவெளியை இணைப்பதன் மூலம் மதிப்பை பெருக்கி நீண்ட கால மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். இது எண்களின் முயற்சியில் ஒரு படி தான், இது போன்று இன்னும் பல வர வேண்டும்". என அவர் தெரிவித்தார். 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close