ராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு: காளிச்சரண் சராப்

ராஜஸ்தானில் 120 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரண் சராப் தெரிவித்துள்ளார்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2018, 03:32 PM IST
ராஜஸ்தானில் 120 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு: காளிச்சரண் சராப் title=

ராஜஸ்தானில் 120 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரண் சராப் தெரிவித்துள்ளார்....

டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் உருவாகும் புதிய கிருமி தொற்றான ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உணரப்பட்டது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947 ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika virus) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோது தான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் 'ஜிகா’ வைரஸ் தாக்கியது. 

இதையடுத்து, தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இராஜஸ்தானில் 120 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரண் சராப் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிகா வைரஸ் குறித்து சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

இராஜஸ்தானில் 120 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 105 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஜிகா வைரஸ் காய்ச்சல் முன்கூட்டியே தடுக்கக் கூடியது என்றும், நோய் தாக்கியவர்கள் நல்ல ஓய்வெடுப்பதுடன் போதுமான அளவு தண்ணீர் குடித்து மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. இலேசான காய்ச்சல், தசை மூட்டுவலி, தலைவலி ஆகியவை இருப்பது இதற்கான அறிகுறிகளாகும்.

 

Trending News