இதய நோய் முதல் புற்றுநோய் வரை... எதுவும் அண்டாமல் இருக்க... டயட்டில் பருப்புகள் அவசியம்

நம்மில் பெரும்பாலானோர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்புகிறோம். இந்நிலையில், நோயாற்ற வாழ்வைப் பெற பருப்பு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 11, 2024, 12:44 PM IST
  • பருப்பு வகைகளை உட்கொள்வதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்.
  • பருப்பு வகைகள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
  • பருப்பு வகைகள் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும்.
இதய நோய் முதல் புற்றுநோய் வரை... எதுவும் அண்டாமல் இருக்க... டயட்டில் பருப்புகள் அவசியம் title=

நாம் உண்ணும் உணவிற்கும், ஆரோக்கியத்திற்கும், நேரடி தொடர்பு உண்டு. அந்த வகையில் புரத சத்து நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். நம்மில் பெரும்பாலானோர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்புகிறோம். இந்நிலையில், நோயாற்ற வாழ்வைப் பெற பருப்பு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

துவரம் பருப்பு, பாசி பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, ராஜ்மா, கொண்டைகடலை என அனைத்தும் சூப்பர்ஃபுட் வகைகளில் அடங்கும். நம் அன்றாட வாழ்வில் பருப்பு வகைகளை கட்டாயம் ஏன் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

பருப்பு வகைகளை உட்கொள்வதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்

ஊட்டச்சத்துக்களின் பவர்ஹவுஸ் (Nutrient Powerhouse)

பருப்பு வகைகள் ஊட்டசத்துக்களின் களஞ்சியம். புரசத்துக்களுடன் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, பருப்பு வகைகள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை (Health Tips) மேம்படுத்தவும், பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவவும் அவசியம்.

புரதம் நிறைந்த உணவு (Protein Rich Food)

பருப்பு வகைகள் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். இது சைவ உணவு உண்பவர்களுக்கு அவர்களின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறந்த தேர்வாக அமைகிறது. புரத சத்து குறைபாடு பல வித உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நார்ச்சத்து நிறைந்த உணவு (Food Rich in Fiber)

பருப்புகளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வாயு போன்ற ஆரீண பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் படிக்க | Brain Booster: மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவும்... சில காலை பழக்கங்கள்

நீரிழிவு நோய் (Diabetes Control)

பருப்பு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகின்றன, அதனால்தான் பெரும்பாலான உணவியல் நிபுணர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பருப்புகளை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். இதில் உள்ள நார்சத்தும் புரதமும் இதற்கு உதவுகின்றன.

இதய ஆரோக்கியம் (Hear tHealth)

பருப்பு வகைகளில் டிரான்ஸ் ஃபேட் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் அவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக இருக்கும். இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுவதால், இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

புற்றுநோய் அபாயம் குறையும் (Preventing Cancer)

பருப்பு வகைகளை தொடர்ந்து உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் உட்பட சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

உடல் எடை குறைய (Weight Loss)

பருப்பு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சில சூப்பர் பழங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News