உங்க மேக்கப் கிட் எக்ஸ்பையரி ஆகிடுச்சா?: இதை செயுங்க!

எக்ஸ்பையரி ஆனா மேக்கப் கிட்-ஆ திரும்ப பயன்படுத்த சில டிப்ஸ் இதோ...! 

Updated: Mar 11, 2018, 03:59 PM IST
உங்க மேக்கப் கிட் எக்ஸ்பையரி ஆகிடுச்சா?: இதை செயுங்க!
ZeeNewsTamil

பெண்கள் அதிக விலை கொடுத்து மேக்கப் பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால்  கொஞ்ச நாளில் 'எக்ஸ்பையரி' ஆகிடும். நமக்கு தூக்கி வீசவும் மனசு வராது அதை பயன்படுத்தவும் முடியாது என்னடா பண்ணுறதுன்னு குழப்பத்தில் இருப்போம். இனி அதை பற்றி கவலை பட வேண்டாம். அதை பயன்படுத்துவதற்கான உங்களுக்கு அருமையான சில வழிகல் இதோ..!  

மஸ்காரா: 

பொதுவா மஸ்காரா 3-6 மாசத்துல காலாவதியாகிடும். பிராண்டடா வாங்கின மஸ்காரா இப்படியாச்சேன்னு நமக்கும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அதை நீங்கி தூக்கி வீசாம, தலை சீவுனதுக்கு அப்புறம் அங்கங்க தெரியுற உங்க நரைமுடில லைட்டா தடவிக்கலாம்.

ஐ ஷேடோ: 

இது ஒரு வருஷம் வரைக்கும் தாங்கும், அதுக்கப்புறம் பிளைன் நெயில் பாலிஷ்ல உங்க ஐஷேடோவை போட்டு மிக்ஸ் பண்ணிட்டீங்கன்னா, புத்தம் புதிய நெயில் பாலிஷ் ரெடி!ஸ்கின் டோனர்: பொதுவா ஸ்கின் டோனர்ல அதிகளவு 'ஆல்கஹால்' இருக்கும். அதனால் இது காலாவதியாகிட்டா டோன்ட்வொர்ரி, கண்ணாடி பொருட்களை கிளீன் பண்ணிக்கலாம். இவ்வளவு ஏன், உங்க மொபைல் ஸ்கிரீனைக் கூட பளிச்சிட செய்யலாம்.

லிப் பாம்: 

உங்க சொரசொரப்பான கால்களை மிருதுவாக்க உதவும். அதோட 'கியூட்டிக்கிள்ஸை' சுத்தப்படுத்தவும் பயன்படுத்திக்கலாம். டிரெஸ், பையில் இறுக்கமான 'ஜிப்'பை தளர்த்தவும், உங்க ஷூவை பளிச்சாக்கவும் யூஸ் பண்ணிக்கலாம்.

ஃபேஸ் ஆயில்: 

ஆலிவ், பாதாம் போன்ற எண்ணெய்களை வாங்கி ரொம்ப நாளாச்சுன்னா, அதோட சர்க்கரையை கலந்து 'பாடி ஸ்கிரப்'பா பயன்படுத்திக்கலாம்.

லிப் ஸ்டிக்: 

உங்க ஃபேவரிட் லிப் ஸ்டிக்கை தூக்கிப் போடாம, அத அப்படியே சூடு பண்ணுங்க, இப்போ அதுல இருக்க பாக்டீரியா எல்லாம் அழிஞ்சிப் போயிருக்கும். அதை அப்படியே சின்ன டப்பாவுல போட்டு வச்சிக்கிட்டா, வேஸ்லின் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லியா யூஸ் பண்ணிக்கலாம்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close