பீன்ஸ் பற்றிய புதிய ஆராய்ச்சி உங்களுக்கு தெரியுமா!!

பீன்ஸ் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்ததுள்ளது.            

Last Updated : Dec 18, 2017, 12:19 PM IST
பீன்ஸ் பற்றிய புதிய ஆராய்ச்சி உங்களுக்கு தெரியுமா!!    title=

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்தும் தன்மை பீன்ஸ்க்கு உண்டு என்று அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்குமாம். சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.  

பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.

நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக் கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.

பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுக‌ள் சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும். வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.  பீன்ஸ் சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

மேலும், எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால் அது இரத்த‌த்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதை‌த் தடுக்கும்.

பின்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனி‌ஷ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது  உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை‌த் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதயத்திற்கு சிறந்தது.

இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

இரைப்பைப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.இவ்வாறு பல கோடி நன்மைகள் நிறைந்த பீன்ஸினை தினமும் எடுத்து கொண்டால் உங்களுக்கு எந்த நோயும் வாரது என்பது ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. 

 

 

Trending News