கோகனட் ஆப்பிள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோகனட் ஆப்பில் பற்றி தெரிந்து கொண்டால் அதை தேடி கண்டுபிடித்து சாப்பிட தோன்றும்!! 

Updated: Jun 11, 2018, 02:06 PM IST
கோகனட் ஆப்பிள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோகனட் ஆப்பில் பற்றி தெரிந்து கொண்டால் அதை தேடி கண்டுபிடித்து சாப்பிட தோன்றும்!! 

பல வகைகளில் பலருக்கு பிடித்தமான ஒரு பழம் ஆப்பிள். அப்பிளில் பழவகைகளை நீங்க கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கோகனட் (தேங்காய்) ஆப்பிள் என்ற அறிய வகை ஆப்பிளை பார்த்ததுண்டா?. அது என்னடா! கோகனட் ஆப்பிள் என்று குழப்பமாக இருக்கா. 

நாம் அனைவரும் பார்க்கும் தேங்காயில் தான் இந்த கோகனட் ஆப்பிள் உருவாகிறது என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா?. ஆனால், அது உண்மைதான். தேங்காயை உடைத்த பின்னர் அதற்க்கு உள்ளே தேங்காய் பூ-வை (பருப்பு) நாம் அனைவரும் பார்த்திருப்போம். அந்த பருப்புதான் கோகனட் ஆப்பிளாக மாறுகிறது. 

முளைத்த தேங்காயில் இருந்து உருவாக்குவதுதான் இந்த கோகனட் ஆப்பிள். நாம் கடைகளில் தென்னை மரக்கன்று வாங்குவோம் அல்லவா, அதை உடைத்து பார்த்தல் அதில் கோகனட் ஆப்பிள் இருக்கும். 

இந்த கோகனட் அப்பிளில் இளநீர், தேங்காயை விட அதிக நன்மைகள் இருக்கிறது. அதன் நன்மைகளை நீங்கள் தெரிந்து கொண்டால் இனி நீங்கள் அதையும் விட்டுவைக்க மாட்டீர்கள்!!

கோகனட் அப்பிளின் பயன்கள்...! 

> கோகனட் அப்பிளில் அதிகபடியான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இதை நாம் சாப்பிட்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் தொற்றுகள் ஏற்படாது.

> கோகனட் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் உள்ள அலுப்புகள் குறைகிறதாம். அதுமட்டும் இன்றி மன அழுத்தத்தை குறைக்கிறது. 

> கோகனட் ஆப்பிள் சாப்பிடுவதால் நமக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள மினரல் மற்றும் விட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. 

> கோகனட் அப்பிள் சாபிட்டால் நமது உடலில் இன்சுலின் சுரப்பது அதிகமாகிறது. இதனால் இரத்தத்தில் அதிகபடியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. 

> கோகனட் அப்பிள் சாப்பிடுவதால் நமது இதயத்தில் உள்ள கொழுப்பை கரைக்கிற தன்மை இதற்க்கு உண்டு.  

> கோகனட் அப்பிள் தைராய்டு பிரச்சனையில் இருந்து தீர்வு தருகிறது. தைராய்டு சுரப்பதையும் கட்டுப்படுத்துகிறது. 

> கோகனட் அப்பிள் சாப்பிடுவதால் உடலில் சுரக்கும் ப்ரீ ரேடிகல்சை வெளியேற்றுகிறது. எனவே உடலில் உள்ள செல்கள் பாதுகாக்கப்பட்டு புற்றுநோய் வருவதை தடுக்கிறது. 

> உடல் எடையை வேகமாக குறைக்க உங்களுக்கு ஒரு எளிய வலி தேவைபட்டால் கோகனட் அப்பிளை சாப்டுங்கள் போதும். 

> வெயில் காலத்தில் ஏற்ப்படும் சிறு நீராக கோளாறுக்கு இந்த கோகனட் அப்பிள் ஒரு நல்ல தீர்வாக விளங்குகிறது. 

> அதுமட்டும் இல்லை, உங்களுக்கு நீண்டநாள் இளமையை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கோகனட் அப்பிள்.