உங்க குழந்தைகளுக்கு எந்த எண்ணெய் யூஸ் பண்ணணு தெரியுமா?

பச்சிளம் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியோருக்கு மற்றும் சிறுவர்கள் என அனைவருக்கும் இந்த ஒலிவ் எண்ணெய் இன்றியமையாததாகும்.  

Bollywood Life | Updated: Mar 5, 2018, 06:31 PM IST
உங்க குழந்தைகளுக்கு எந்த எண்ணெய் யூஸ் பண்ணணு தெரியுமா?

நமக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவுகள் சேமிப்படையாமல் இருப்பதே முக்கிய காரணமாகும். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் இதுவே முதன்மை காரணமாக அமைகின்றது.

எனவே, ஒலிவ் எண்ணெயை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. ஏனென்றால் ஒலிவ் எண்ணெய் என்பது மருத்துவ குணம் நிறைந்ததாகும். மேலும், வைட்டமின்கள், கனிம சத்துகள் நிறைந்துள்ளன. நல்லெண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் என்பன ஈரல் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியன. அதனால் ஒலிவ் எண்ணெயை உபயோகப்படுத்துவது சிறந்தது. 

>ஒலிவ் எண்ணெயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புச்சத்துக்கள் வளரும் குழந்தையின் இதயம் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

>குழந்தைகளுக்கு இருமல் ஏற்படும் வேளைகளில் ஒலிவ்எண்ணெயை குழந்தையின் நெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதிகளில் தேய்த்து வர இருமல் நீங்கும்

>பச்சிளம் குழந்தைகள் மலச்சிக்கலால் அவதியுறும் பட்சத்தில், அவர்களது வயிற்றில் இடமிருந்து வலமாக வட்டமான முறையில் இந்த ஒலிவ்எண்ணெயை பூசினால் மலச்சிக்கல் குணமடையும். அத்துடன் நிம்மதியான தூக்கமும் ஏற்படும்.

குழந்தைகளுக்கு அதிகம் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கவும். அதிகளவில் சர்க்கரை உட்கொள்வதனால் ஈரல் மீது அதிக அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம், ஃபுருக்டோசை கொழுப்பாக மாற்றி இரத்தத்துடன் சேர்க்கும் ஈரலின் செயற்பாட்டை பாதிக்கும்.

>சிறுகுழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயப்பர்களால் சில சமயங்களில் சொறி மற்றும் ஒவ்வாமை போன்றன ஏற்படுவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் ஒலிவ்எண்ணெயை பூசினால் அது குணமடையும்.

>பாலுற்பத்திப் பவுடர் உட்கொள்வதை குறைக்கவும் அதிகளவு பாலுற்பத்திப் பவுடர் உட்கொள்வதால் ஈரலில் சளியம் அதிகளவில் சேர்கின்றது.

>பச்சிளம் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியோருக்கு மற்றும் சிறுவர்கள் என அனைவருக்கும் இந்த ஒலிவ் எண்ணெய் இன்றியமையாததாகும்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close