ஒருநாள் தூங்கலைனா என்ன ஆகா போகுது: அப்படி நினைக்குற ஆளா? நீங்க!

ஒருநாள் துங்கலைனா என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க இத படிங்க பாஸ். அப்புறம் தானா தூங்குவீங்க. 

Updated: Jan 9, 2018, 04:00 PM IST
ஒருநாள் தூங்கலைனா என்ன ஆகா போகுது: அப்படி நினைக்குற ஆளா? நீங்க!
zeemedia

ஒரு மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு அவசியம் என்பது தெரியுமா. நமக்கு நாளைக்கு தேர்வோ அல்லது ஆபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குதாலோ அன்றைக்கு நமக்கு தூக்கம் வராது. இப்படி தூக்கம் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக நமது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

ஒரு ஆரோக்கியமான உடல் நிலைக்கு சத்ததான உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கம் ஆகியவை கட்டாயம் தேவை. தொடர்ச்சியாக சரியான தூக்கம் இல்லைஎன்றால் தூக்கமின்மை உங்கள் உடலில் டயாபெட்டீஸ், உடல் பருமன் மற்றும் இதய நோய்களை போன்றவற்றை நம்மிடம் கொண்டு வந்துவிடும்.

சரியாக நாம் தூங்கவில்லை என்றால் நமது உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது அதிகரிப்பால் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. நமக்கு சரியான தூக்கமின்மையால் உடலின் உள்ள நோய் எதிர்ப்பு திறன் குறைந்து விடுவதால் பல பிரச்சனைகள் தோன்றுகிறது. 

நாம் குறைந்தது ஐந்து மணி நேரம், அதிகமான ஒன்பது மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சரியான அளவு தூக்கமின்மையால் இதய நோய்கள் மற்றும் வலிப்பு நோய்கள் போன்றவை ஏற்பட வழிவகுகிறது.

தூக்கமின்மையால் மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகல் அதிகம். 

ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் மூளையின் செயல்திறனை பாதித்து சரியாக சிந்தனை செய்ய விடாமல் தடுக்கிறது.

ஒரு நாள் தூங்காவிட்டாலும் அதிகமான நினைவாற்றல் திறனை பாதித்து மறதியை ஏற்படும். அதுமட்டுமின்றி மூளையின் செயல்திறனையும் குறைகிறது. சரியான தூக்கமின்மையினால் நமது உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து டயாபெட்டீஸ் நோய் ஏற்படும்.

தூக்கமின்மையால் உங்கள் வயதை விட உங்கள் தோற்றம் அதிகரித்து காணப்படும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சரும கோடுகள், சுருக்கங்கள், சமமற்ற சரும நிறம் மற்றும் சரும தொய்வு போன்ற வயதான தோற்றத்தையும் ஏற்படுத்தும்.