குளியல் அறையில் செய்யக்கூடாத 5 விஷயம்!

நான் தினமும் குளிப்பது அவசியம் தான், ஆனால் குளிப்பதற்கு என ஒரு முறை உள்ளது அல்லவா... பெரும்பாலும் நாம் குளிக்கையில் இந்த 5 தவறுகளை நாம் செய்துகொண்டு தான் இருக்கின்றோம் என ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கின்றது!

Updated: Mar 13, 2018, 06:59 PM IST
குளியல் அறையில் செய்யக்கூடாத 5 விஷயம்!
Representational Image

நான் தினமும் குளிப்பது அவசியம் தான், ஆனால் குளிப்பதற்கு என ஒரு முறை உள்ளது அல்லவா... பெரும்பாலும் நாம் குளிக்கையில் இந்த 5 தவறுகளை நாம் செய்துகொண்டு தான் இருக்கின்றோம் என ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கின்றது!

இந்த தவறுகள் உங்கள் சருமத்தினை பாதிப்படைய வைக்கலாம். அவற்றில் இருந்து எவ்வாறு கவனமாக தப்பிப்பது? அப்படி என்ன நாம் தவறு செய்கின்றோம்?

சுடு நீரில் குளியல்...

நீங்கள் வென்நீரில் குளிக்கின்றீரா?... வென்நீர் குளியல் உங்கள் அலுப்பினை போக்கலாம் ஆனால, நம் உடலில் இயற்கையாக சுறக்கும் எண்னெய் சுரப்பிகளை அது அழித்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

குளியல் என்ற வார்த்தையே, குளிர்விப்பது என பொருள் படும். நம் உடம்பின் சூட்டினை குளிர்விக்கவே நாம் தினமும் குளிக்கின்றோம். அதற்கு குளிர்ந்த நீரே சரியான தேர்வு ஆகும்.

நீண்ட நேர குளியல்...

சிலருக்கு நீண்ட நேரம் குளிக்க பிடிக்கும், சொல்லப்போனால் சுமார் 30 நிமிடங்கள் கூட அவர்கள் தங்கள் குளியல் அறையில் செலவிடுகின்றனர் எனலாம். ஆனால் இவ்வாறு நீண்ட நேரம் குளியல் எடுத்துக்கொள்வது, சருமத்தின் ஈரப்பதத்தினை முழுமையாக குறைத்துவிடும். முடிந்தவரையில் 10 நிமிடங்களில் உங்கள் குளியலை முடித்து கொள்ள முயற்சியுங்கள்.

வாசனை சோப்பு பயண்படுத்துகின்றீரா?

சோப்புக்களில் சேர்க்கப்படும் திரவியங்கள், வேதிப்பொருட்கள் நம் சருமத்தின் நிலைப்பாட்டினை எளிதில் மாற்றக்கூடியவை. ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்றவகையில் சோப்புக்கள் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் தங்களுக்கு பிடித்த வாசனை தரும் சோப்பினையே சிலர் விரும்புகின்றனர். இந்த செயல்பாடானது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயம் ஆகும்

அரக்கு பயன்படுத்துவது உங்கள் வழக்கமா?

அரக்கு, பெரும்பாலும் கிராம்புற மக்களால் பயன்படுத்தப்படும் இயற்கை காரணி. ஆனால் தற்போது அதுவும சந்தைப்படுத்தப்பட்டு கார்பரேட் பொருளாக மாறிவிட்டது. சிலர் வாசனைக்காக அத்தகு பாக்கெட் அரக்கில் சில வேதிப்பொருட்களை சேர்க்கின்றனர். ஆகையால் அரக்கினை மாற்றி மாற்றி பயண்படுத்துதல் உடல் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பு: இந்த நிபந்தனை இயற்கை அரக்கிற்கு பொருந்தாது.

ஈர தலையுடன் வெளிவருதல்..

குளியல் அறையில் இருந்து வெளிவரும் போதே நம் உடலில் இருக்கும் நீரை முழுமையாக வடித்து விடுதல் அவசியம். தலையில் விட்டுவிடும் நீர் தலை பாரத்தினை உண்டாக்கும், உடல் பகுதியில் விட்டு வைக்கம் நீர் ஆக்னே எனப்படும் முதுகு பறுக்களை உண்டாக்க காரணமாக அமைந்துவிடும்.