வெள்ளையானது ஆனா வேகமா குறையும்!!

உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸ் உதவுகிறது. 

Last Updated : Dec 22, 2017, 05:43 PM IST
வெள்ளையானது ஆனா வேகமா குறையும்!! title=

முட்டைக்கோஸானது கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

முட்டைக்கோஸை நறுக்கி தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் குடல் புண் குணமாகும்.

இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

முட்டைக்கோஸுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி நாள்களுக்கு காலை உணவாகச் சாப்பிட்டுவந்தால் உடல்பருமன் குறையும். முட்டைக்கோஸுடன் மிளகு, பூண்டு,வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

முட்டைக்கோஸில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருப்பதால், இவை மார்பகம், தொண்டை, குடற்புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது.

முகப்பருக்கள் இருப்பவர்கள் வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாகும். அஜீரணக் கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் உடலும், முகமும் இளமை தோற்றத்துடன் இருக்கும். சொறி, சிரங்கு இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு உடலின் எடை குறைய உதவுகிறது. விட்டமின்-K நிறைய அளவில் இருப்பதால் அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைக்கோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் ’பிரீ-ரேடிக்களை’ சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள்  முட்டைக்கோஸில் இருப்பதால், இவை இதய துடிப்பு, உடற்செல்கள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

முட்டைக்கோஸில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் இருப்பதால் இவை கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்றி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. முட்டைக்கோஸில் உள்ள போலிக் அமிலம் ஏராளமாக இருப்பதால் இது ரத்த சோகையை குணப்படுத்தி ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

Trending News