PVC பைப்பில் சிக்கிய ஆணுறுப்பு; தீயணைப்பு வீரர்களால் மீட்பு!

PVC பைப்பில் சிக்கிய மலேசியா முதியவரின் ஆணுறுப்பு, தீயனைப்பு வீரர்களின் உதவியால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Nov 26, 2018, 07:12 PM IST
PVC பைப்பில் சிக்கிய ஆணுறுப்பு; தீயணைப்பு வீரர்களால் மீட்பு!
Pic Courtesy: fb/@BombaMalaysia.syed

PVC பைப்பில் சிக்கிய மலேசியா முதியவரின் ஆணுறுப்பு, தீயனைப்பு வீரர்களின் உதவியால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

மலேசியாவின் பெடலிங் ஜெயா பகுதி தீயனைப்பு வீரர்களுக்கு கடந்த சனி அன்று அதே பகுதியில் இருக்கும் சுங்காய் ப்ளுவு மருத்துவமனையில் இருந்து "முக்கிய" மீட்பு நடவடிக்கைகாக அழைப்பு வந்துள்ளது. தகவல் பெற்று சம்பவயிடம் சென்ற தீயனைப்பு வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது...

ஆம் அங்கு 60-வயது மலேசிய முதியவரின் ஆணுறுப்பு PVC பைப்பினுள் சிக்கியதாகவும், Air rescue ring cutter(ARRC) உடவியுடன் முதியவரின் தனி உறுப்பினை மீட்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் தீயனைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்த போதிலும் பின்னர் வெற்றிகரமாக இந்த செயல்பாட்டினை செயதுள்ளனர்.

இந்த நிகழ்வினை குறித்து Fire & Rescue Department of Malaysia தனது முகப்புத்தகத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட தகவல்களின் படி ARRC செயல்முறையின் மூலம் அறுத்தெடுக்கப்பட்ட PVC பைப்பின் (முதியவரின் அந்தரங்க உறுப்பில் சிக்கிக்கொண்ட PVC பைப்பின்) நீளம் 5.1cm ஆகும். எனினும் மற்ற விவரங்களை மலேசிய தீயனைப்பு துறை வெளியிட மறுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது... இருக்காத பின்ன.?!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close