இயற்கை முறையில் :- வயிற்றுபோக்கு உடனடி தீர்வுகள்.

Last Updated : Aug 21, 2017, 07:17 PM IST
இயற்கை முறையில் :- வயிற்றுபோக்கு உடனடி தீர்வுகள். title=

வயிற்றுப் போக்கு ஏற்படும் பொழுது நாம் கையாளும் இயற்கை முறைகள் சற்று திரும்பி பார்ப்போம் 

1. விளக் கெண்ணை :- ஆமணக் கெண்ணெய், முத்தண்ணெய் என்ற பெயர்களால் அழைக்கப்படும் எண்ணெய் வயிற்றுபோக்கு இயற்கையான மருத்துவத்திற்கு மிகச் சிறந்த பொருளாகும்.தனியாக விளக் கெண்ணெய் 2 முதல் 8 தேயிலைக் கரண்டி அளவு ( 10 மி. லி முதல் 40 மி. லி வரை ) வயதிற்க்கேற்றவாறு அருந்தலாம். 3 வயதுக் குழந்தை எனில் 10 மி. லி. அளவு அருந்தலாம். நல்ல திடமான நடுத்தர வயதுடையோர் 40 மி. லி. வரை அருந்தலாம்.  விளக்கெண்ணை அருந்திய 15  நிமிடங்களுக்குள் பெதியாகத் தொடங்கம். நன்றாக வயிறு கழியும் வரை வெந்நீர் அருந்திக் கொண்டிருக்கலாம். மார்புச்சளி, தோல் அரிப்பு நீங்க 30 மி. லி. விளக் கெண்ணையுடன், இஞ்சிச் சாறு 10 மி. லி. தேன் 10 மி. லி. வெந்நீர் கலந்து பயன்படுத்தலாம்.

வயிற்று மந்தம் நீங்க 100 மி. லி. விளக்கெண்ணெயுடன் 10 பல் பூண்டு போட்டுக் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெய் 15 மி. லி. முதல் 40 மி. லி. வரை பயன்படுத்தலாம். இதனைக் குழந்தைகளுக்கு 5  சொட்டு தினமும் கொடுத்து வந்தால் வயிற்று மந்தம் நீங்கும்.கல்லீரல் பிரச்சனைகள் தீர 30 மி. லி. விளக் கெண்ணையுடன் 15 மி. லி எலுமிச்சைச் சாறு 50 மி. லி. வெந்நீர் கலந்து பயன்படுத்தாலம்.

2. கடுக்காய் :-  கடுக்காயின் விதை நீக்கி அதனை சிதைத்து 3 தேயிலைக் கரண்டியளவு எடுத்து 300 மி. லி. நீர்விட்டு 100 மி. லி.  ஆகும் வரை வற்றக் காய்ச்சி காலையில் அருந்தலாம்.

3. நிலவாகை இலை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ) :- நிலவாகை இலை 30 கிராம் ( காய்ந்தது என்றால் 20 கிராம் போதும் ) கொத்தமல்லி விதை ( தனியா ) 20 கிராம் இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து 400 மி. லி. நீர் விட்டு 100 மி. லி. ஆக வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி காலையில் அருந்தலாம்.

4. ஆமணக்கு வேர் :-பொடி செய்து 2 கிராம் – 5 கிராம் அளவிற்கு நீருடன் கலந்து காலையில் அருந்தலாம்.

5. பேதி மருத்துவத்திற்கான சித்த மருந்துகள் :- அகத்தியர் குழம்பு, சித்தாதி எண்ணெய், வெள்ளை எண்ணெய், கழற்சி எண்ணெய், மலை வேம்பாதித் தைலம், மெருகன் கிழங்கு தைலம், மேக நாதத் தைலம் போன்ற மருந்துகள் மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு கடைகளில் கிடைக்கின்றன. இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட சித்த மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இவை எல்லாமே பொதுவாக பேதி உண்டாக்கவும் சில குறிப்பிட்ட நோய் நிலைகளில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.

Trending News