நவராத்திரி: நெய்வேத்தியத்துக்கு காராமணி சுண்டல்! செய்முறை உள்ளே!!

நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று  நாட்களும் சரஸ்வதியின் நாட்கள். 

Updated: Oct 9, 2018, 03:23 PM IST
நவராத்திரி: நெய்வேத்தியத்துக்கு காராமணி சுண்டல்! செய்முறை உள்ளே!!

நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று  நாட்களும் சரஸ்வதியின் நாட்கள். 

நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். மேலும் நவராத்தியின்போது ஒவ்வொரு நாட்கள் ஒவ்வொரு வகையான செய்வது சிறப்பு.

நவராத்தியின் முதல் நாளன இன்று காராமணி சுண்டல் செய்து சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வது சிறப்பு. சரி இப்போது காராமணியைக் கொண்டு எப்படி சுண்டல் செய்வதென்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்: 

காராமணி - 1/4 கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது வரமிளகாய் - 1 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

முதலில் காராமணியை வாணலியில் போட்டு 2-3 நிமிடம் வறுத்து, பின் அதனை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து, காராமணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் உப்பு தூவி, வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி விட வேண்டும். 

பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறினால் காராமணி சுண்டல் ரெடி.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close