காயத்தை குணமாக்க மருந்து தேவையில்லை, உமிழ்நீர் போதும்

Updated: Aug 11, 2017, 01:21 PM IST
காயத்தை குணமாக்க மருந்து  தேவையில்லை, உமிழ்நீர் போதும்

மனிதரின் உமிழ்நீர் கலவை, மனித இரத்த நாளங்களை சீராக்கி உடலில் உள்ள காயங்களை குனபடுத்த உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பிதான் ஆக வேண்டும். 

ஆராய்ச்சியாளர்கள், இரத்தக் குழாய் உருவாக்கத்தில் ஹிஸ்டாட்டின் -1 விளைவு குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் மனித உமிழ்நீருக்கு சர்மத்தில் ஏற்படும் காயத்தை குணபடுத்தும் திறன் இருபதாக கண்டறிந்தனர்.

சிலி பல்கலைக்கழக இணை பேராசிரியர் வின்சென்ட் டோரஸ் கூறுகையில், இந்த ஆய்வானது "வாய்வழி மற்றும் தோல் காயம் சிகிச்சைமுறைக்கு இடையேயான வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட உயிரியலைப் புரிந்துகொள்வதற்கு" மேற்கொள்ளப்பட்டது என கூறினார்.

மேலும் இந்த ஆராய்ச்சியானது மூன்று நிலைகளில் நடத்தபட்டது: நொதிதல் அல்லது இரத்தக் குழாய் உருவாக்கம், செல்கள் உருவாக்கம்; விலங்கு மாதிரிகள்; ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான உமிழ்நீர் மாதிரிகள் கொண்டு நடத்தப்பட்டது. இந்த மூன்று மாதிரிகள், ஹிஸ்டடின் -1 மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரத்தக் குழாய் உருவாவதை அதிகரிக்க முடியும் என நிறுபித்தது.

எனவே, இந்த மூலக்கூறுகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இப்போது படிப்படியாக இந்த படிவத்தை மேம்படுத்தி  காயங்களை குணப்படுத்துவதற்காண பொருள்களை தயாரித்து வருவதாக கூறினார்.

FASEB ஜர்னலில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.