தினமும் ஒரு ஹக் பண்ணிக்கிட்டா... நீண்ட நாள் வாழலாமாம்....

நாம் தினமும் ஹக் பண்ணிக்கொல்வதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?.....!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Sep 10, 2018, 12:19 PM IST
தினமும் ஒரு ஹக் பண்ணிக்கிட்டா... நீண்ட நாள் வாழலாமாம்....
File Pic

நாம் தினமும் ஹக் பண்ணிக்கொல்வதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?.....!

ஒரு மனிதன் தனது உணர்சிகளை பல்வேறு முறைகளில் வெளிப்படுத்துகின்றான். நமக்கு விண்ணை முட்டும் அளவுக்கு மகிழ்ச்சியில் இருந்தாலும் சரி, தாங்க முடியாத துக்கத்தில் இருந்தாலும் சரி நமக்கு பிடித்தவர்கள் அல்லது நெருக்கமானவர்களிடம் நாம் கட்டியணைத்து வெளிப்படுத்துவோம். இது அனைவரிடமும் இருக்கும் ஒரு இயல்பான பழக்கம். 

பெரும்பாலான மக்கள் நாம் மற்றவர்களை கட்டியனத்தால் அது கொலை குற்றத்திற்கு சமமாக பாவித்து நம்மை பார்ப்பார்கள். அது, அப்படி ஒன்றும் கொலை குற்றம் கிடையாது. நமது மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் இயல்பான வெளிப்பாடுதான் கட்டியணைத்தல்.   

உங்களின் வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய நண்பன், அல்லது பெற்றோர் ஆகியோரை தினமும் ஹக் பண்ணி முத்தம் கொடுப்பதால் உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி நாம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்வதை நம்மால் உணரமுடியும். இந்த உண்மையை பல அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளது. அந்த ஆய்வின் மூலம் நாம் ஹக் பண்ணும் போது ரத்த அழுத்தம் குறைகிறது, உங்கள் நரம்பு மண்டலம் சீரடைவதால் உங்களின் மனநிலைகளில் இருக்கும் கோபம், வெறுமை போன்ற எதிர்மறையான உணர்வுகள் குறைகிறது.

நாம் ஹக் செய்யும் பொழுது நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆக்ஸிடாசின் என்னும் கெமிக்கல் வெளியேறுகிறது. இதனால் உங்கள் உடளுக்கு நோய்க்கு எதிராக போராடாடும் சக்தி அதிகரிக்கிறது. நாம் தினமும் காலையை ஹக்கோடு தொடங்கும் போது  அன்றைய நாள் முழுவதும் நாம் முழு எனர்ஜியுடன் இருப்பதை இந்த ஆய்வு உருதிபடுத்தியுள்ளது. 

சுமார், 50% மக்களின் மனநிலையில் நேர்மறையான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆரோக்கியமான மனநிலையில் செய்யும் போது வேலைகளை சரியாக வேகமாகவும் செய்ய முடிகிறது. இதுவே, நாம் நீண்ட நேரம் ஹக் செய்து கொண்டு பேசும் பொழுது உடலில் செராடோனின் அளவு அதிகரிக்கிறது இதனால் மன அழுத்தம் குறைகிறது. உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் நெருக்கமானவர்களின் மனநிலையிலும் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்கிறது.

தினமும் ஹக் பண்ணிக் கொள்ளுவதால் மன அழுத்தம் குறைந்து இடையூறு இல்லாத நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது. ஒரு மனிதனுக்கு நாம் ஆரோக்கியமாக இருக்க நல்ல தூக்கம் கிடைத்தாலே போதும். போய்வருவதை தடுக்கலாம். ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்....!