பிரசவத்தில் கவனக்குறைவு; குழந்தை உடல் ரெண்டு துண்டான கொடூரம்...

Last Updated : Jan 11, 2019, 07:06 PM IST
பிரசவத்தில் கவனக்குறைவு; குழந்தை உடல் ரெண்டு துண்டான கொடூரம்...  title=

பிரசவத்தின் போது மருத்துவர் கவனக்குறைவால் பிரசவத்தில் குழந்தையை இரண்டு துண்டாக வெளியில் எடுத்த செவிலியர்..... 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டதின் ராம்கார் நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் திக்ஷா கன்வார் என்ற கர்ப்பிணிப் பெண், பிரசவத்துக்காக கடந்த 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரவசத்துக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஆண் செவிலியர் ஒருவர் தான் பிரசவம் பார்த்துள்ளார்.

அவர், குழந்தையை வெளியில் வேகமாக இழுந்ததால், குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக வெளியே வந்துள்ளது. உடனே, பதறிய செவிலியர், குழந்தை பாதியாக வெளியே வந்ததை மறைத்து, குழந்தைப் பிறப்பதில் சிக்கல் உள்ளது. வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கர்ப்பிணியின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, கர்ப்பிணிப் பெண் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும்போது அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தையின் தலைப் பகுதி மட்டும் இருந்துள்ளது.

அதனையடுத்து, மருத்துவர்கள் கர்ப்பிணியின் உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ராம்கார் அரசு மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த ஆண் செவிலியர்கள் அம்ரிட்லால், ஜுன்சார் சிங் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுவரையில் இருவரும் கைது செய்யப்படவில்லை. இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் இருவரும் குடித்திருந்ததாக கூறப்படுகிறது. வெளியே வந்த பாதி உடலை, அந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மறைத்துவைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கு தீவிரச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 

Trending News