பப்பாளியின் சில அழகு குறிப்புகள்:- படிக்க!

Last Updated: Friday, August 11, 2017 - 14:41
பப்பாளியின் சில அழகு குறிப்புகள்:- படிக்க!
Zee Media

சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்க வீட்டில் உள்ள சில பொருட்கள் வைத்து பாதுகாத்துக்கொள்ளலாம். அதில் பப்பாளியால் ஏற்றப்படும் சரும பயன்கள் என்னவென்று பார்க்கலாம்:-
 
* பப்பாளி பழம் முகத்தில் படியும் அழுக்கு மற்றும்  எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கி கவர்ச்சி தரும் .

* பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டு. அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொண்டு .அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில்கழுவி வந்தால் சருமம் கருமையை நீக்கி முகம் பொலிவு பெரும். 

* பப்பாளி பழமும், எலுமிச்சை பழமும் சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும். நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைந்து .அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

* பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.

* பப்பாளி பழதை, தினமும் உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெரும் மற்றும் கருமை நீறம் நீக்கி விடும். பப்பாளி வைட்டமின் A நிறைந்தது அழகு, மருத்துவம் ,என்ற குணம் நிறைந்தது பப்பாளி. 

comments powered by Disqus