தலை முடி உதிர்வுவை தடுக்க சில வழிமுறைகள்:-

Last Updated : Oct 16, 2017, 01:57 PM IST
தலை முடி உதிர்வுவை தடுக்க சில வழிமுறைகள்:-  title=

பொதுவாக இயற்கை வைத்தியம் மேற்கொள்வது மிக நல்லது. அதுவும் தலைமுடி உதிர்வு முக்கிய காரணம் போடுகு தான் அதை குறைக்க சிறந்த வழிகளை தெரிந்துக்கொள்வோம். 

பொடுகை குறைக்க வழிமுறைகள் :

இரண்டு வாரத்திருக்கு ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிப்பதான் முலம் முடி உதிர்வை தவிர்த்து கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். மற்றும் பொடுகுத் தொல்லைகள் சரிசெய்யலாம்.

வசம்பை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் குறையும்.

தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லைகள் நீங்கும்.

பொடுகு தொல்லையா அதிகமாகும் போது இரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து நல்லது. 

வேப்பிலை, துளசி ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் தீரும்.

வெந்தயப்பொடி தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்கலாம். 

தயிர் கடலைமாவுடன் சேர்த்து குளிக்கலாம். 

இது தலையை குளிர்சியாக வைத்து கொள்ளும், பொடுகுத் தொல்லைகளும் நீங்கும்.

ஓய்வு நாட்களில் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 

முட்டையின் வெள்ளைக்கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

இப்படி செய்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் நீங்கி பார்பதற்கு முடி அழகாக இருக்கும்.

Trending News