உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு(seafood)!

கடல் வாழ் உயிரனங்களை சமைக்காமல், பச்சையாக சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்து விளையும் என தென் கொரியாவில் நடந்தேறிய சம்பவம் உணர்த்தியுள்ளது!

Updated: Aug 29, 2018, 04:55 PM IST
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு(seafood)!
Pic Courtesy: //nejm.org

கடல் வாழ் உயிரனங்களை சமைக்காமல், பச்சையாக சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்து விளையும் என தென் கொரியாவில் நடந்தேறிய சம்பவம் உணர்த்தியுள்ளது!

தென் கொரியாவை சேர்ந்த 71-வயது முதியவர் ஒருவர் கடல் வாழ் உயிரினங்களை பிடித்து, அதை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதை வழக்காமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ஜியோன்ஜூ கடற்கரையில் பிடித்த உயிரனத்தை அப்படியே உண்டுள்ளார்.

இதன் காரணமாக தன் உடலில் சற்று உவாதைகள் ஏற்பட்டுள்ளதை அவர் உணர்ந்துள்ளார். அவரது உடலில் உள்ள ரத்த செல்கள் உரைய துவங்கி, பெரும் நீர்கட்டி போல் இடது கை முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவரை அனுகிய அவர் தான் Vibrio Vulnificus கிருமியால் தாக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.

இந்த கிருமி உயிரையே எடுத்துவிடும் வல்லமை படைத்தது. பாதிக்கப்பட்ட முதியவர் உணவு உண்டு கிட்டத்தட்ட 12 நேரம் கழித்து பார்க்கையில் அவரது கை முழுவதுமாக அந்த கிருமி பரவி இருந்தது.

இவரது உயிரை காப்பாற்ற உடனடி அறுவை சிகிச்சை தேவை என மருத்துவர்கள் தெரிவித்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர் கிருமி நாசினி பயன்படுத்தி 15 நாட்கள் அவரை மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது இடது கையினை இழந்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொண்ட முதியவரின் மருத்தவ குறிப்பு குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை வெளியிட்டுள்ளது. 

இவரை கண்கானித்த மருத்துவர்களின் அறிக்கையின் படி கடல் உணவுகளை சமைக்காமல் பச்சையாக உண்பதால் இத்தகைய விச கிருமிகள் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close