மிளகின் விசித்திரமான உண்மைகள்...

Updated: Sep 20, 2017, 03:31 PM IST
மிளகின் விசித்திரமான உண்மைகள்...

மிளகின் அறிய வகையான உண்மைகளை தெரிந்துக்கொள்வோம்..!

மிளகு கொடியின் வகையை சார்ந்தது. இந்த மிளகு சித்த மருத்துவத்திலும் சிறப்பிடம் உள்ளது. நறுமணப் பொருட்களின் அரசனாக கருதப்படுவது இந்த மிளகைத்தான். மிளகு உற்பத்தியில் கேரளா முன்னிலையில் உள்ளது. அதற்கடுத்தபடியாக, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

வால்மிளகு : ஒரு அறிய வகையான மூலிகைக் கொடியில் காய்ப்பதாகும். மிளகின் ஒரு வகையான இது. மிளகைப்போலவே, காம்புடன் இருப்பதால் இதை வால்மிளகு என்பர்கள். இதனை மணத்திற்காகவும் சமையலில் முக்கியமாக பயன்படுத்தப் படுகிறது. மேலும், இதில் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மையால், பசியினைத் தூண்டுவது மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிப்பது ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. இது சித்த மருத்துவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

மிளகு கலர்கள்  : வெண்மிளகு, பச்சை மிளகு, சிவப்பு மிளகு, கருமிளகு என்று உள்ளது.

சிவப்பு மிளகு : வினிகரில் ஊற வைத்து பாதுகாக்கப்பட்ட பழுத்த மிளகு சிறு பழங்கள், இளஞ்சிவப்பு மிளகு என்றும், சிவப்பு மிளகு என்றும் அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகுப் பழங்களை சில வேதியல் பொருள்களின் துணையுடன் உலர வைப்பதன் மூலமும் சிவப்பு மிளகு தயாரிக்கப்படுகிறது. மற்றும் சிவப்பு மிளகில் அதிகம் காரம் கொண்டவை. இதன் விலை மிகவும் அதிகம், கிலோ, 375 முதல், 400 ரூபாய் வரை, விலை போகின்றன.

வெண் மிளகு : பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

பச்சை மிளகு : கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கந்தக டை ஆக்சைடுடன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வினிகருடன் ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. ஆசிய சமையல் முறைகளில் ஒன்றான, தாய்லாந்து நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.

கரு மிளகு பயன்கள் : பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளின் மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான சூரிய ஒளியும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, பின் சரியான பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.

மிளகின் மருத்துவகுணங்கள் :

# சிறிதளவு மிளகை இடித்து, அதை நீரில் கொதிக்க வைத்து பனவெல்லம் கலந்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும்.

# மிளகை பொடி செய்து, அருகம்புல் சிறிதளவு சேர்த்து,  நீரில் கொதிக்க வைத்து குடித்தால் பூச்சி கடி காரணமாக ஏற்படும் தோல் தடிப்பு, அரிப்பு போன்றவை குணமாகும். 

# ஒரு வெற்றிலையை மிளகுடன் சேர்த்து அதை நீரில் கொதிக்கவைத்து அருந்தினால் தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை குணமாகும்.

# மிளகு, பெருஞ்சீரகம் இவை இரண்டும் பொடி செய்து தேனில் கலந்து சாபிட்டால் மூல நோய் குணமாகும்.
 
# மிளகு பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்தால் பல் கூச்சம் மற்றும் பல் சொத்தை போன்றவை குணமாகும்.

# மிளகுடம் சிறிது உப்பு சேர்த்து சாபிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.  

# உடல் பருமனை  குறைக்க உதவுகிறது. 

# உடலில் வியர்வையை அதிகரித்து உடலில் நச்சுப் பொருட்களை அகற்ற கின்றன. 

# தலையில் இருக்கும் பொடுகை ஒழிக்கவும் பயன்படுகிறது.

# வாய்வு கோளாறு ஏற்படும்போது நீரில் மிளகினை கொதிக்க வைத்து பனவெல்லம் கலந்து அருந்தினால் வாய்வுக் கோளாறு உடனே தீர்ந்துவிடும்.

# சரியாக ஜீரணமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது.

# சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைக்கு மிளகு மருந்தாக பயன்படுத்துகிறோம்.

# உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிளகு உருவாக்கும்.

# மிளகைப் பொதுவாகப் பழுத்தபின் உலர்த்திப் பயன்படுத்துவது வழக்கம். பழுப்பதற்குமுந்தைய பச்சை மிளகினை வாத நோய்களையும் சீழ்வடியும் மூலத்தையும் குணப்படுத்த மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். மிளகின் இலைக்கும் கூட மருத்துவப் பயன்கள் உண்டு.