தலைமுடி உதிர்வை தடுக்க இந்த 5 வழிமுறை அவசியம்!

தற்போதைய காலக்கட்டத்தில் தலைமுடி உதிர்வு என்பது தான் இளைஞர்களின் பெரும்பான்மை பிரச்சணையாக உள்ளது!

Last Updated : Feb 25, 2018, 06:49 PM IST
தலைமுடி உதிர்வை தடுக்க இந்த 5 வழிமுறை அவசியம்! title=

தற்போதைய காலக்கட்டத்தில் தலைமுடி உதிர்வு என்பது தான் இளைஞர்களின் பெரும்பான்மை பிரச்சணையாக உள்ளது!

ஏன் தலைமுடி உதிர்வு அதிகமாகிறது என பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். அதைவிட அந்த பிரச்சணையில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது தான்.

இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு., பிரச்சணையை அறிந்த அது ஏற்படாமல் தடுத்தால் தப்பித்துவிடலாம் அல்லவா... ஆம் அப்படி என்ன தவறு நாம் செய்கின்றோம்...

1. கண்டிஷ்னரை தவிர்ப்பது...

குளியலுக்கு பிறகு தலைமுடிகளை பதப்படுத்த கண்டிஷ்னர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தலைமுடி காய்ந்த பிறகே இந்த கண்டிஷ்னர்களை பயன்படுத்த இயலும். நேரமின்மை காரணமாக இந்த கண்டிஷ்னர்களை பலர் உபயோகிக்க மறந்துவிடுகின்றனர். இதுவும முடி உதிர்வுக்கு ஒரு காரணம் தான்!

கண்டிஷ்னர்கள் என்பது எப்போதும் அவசியம் இல்லை, ஆனால் நீங்கள் ஷாம்புக்களை பயன்படுத்தினால் கண்டிஷ்னர்களின் தேவை அவசியமாகிறது.

2. அடிக்கடி தலைக்கு குளிக்கிறீர்களா...

தினமும் அல்லது தொடர்சியாக குறைந்த கால இடைவெளியில் நீங்கள் தலை கசக்கும் பட்சத்தில் தலை முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகிறது. இவ்வாறு செய்வதினால் தலைமுடி வேர்கள் பலம் இழக்கின்றது, இதனால் விரைவில் தலைமுடிகளை இழக்க நேரிடும்.

3. தவறான ஷாம்புகளை பயன்படுத்தினால்...

சருமத்தைப் போல் முடிகளுக்கும் தனி தனி ஷாம்பு வகைகள் உண்டு. இந்த வகை முடிகளுக்கு இந்த வகை ஷாம்புகளை தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று நாம் பயன்படுத்தும் ஷாம்பு பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளிலுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாறாக பயன்படுத்தும் பட்சத்தில் ஷாம்புவின் வீரியம் உங்கள் தலைமுடியினை அழித்துவிடும்.

4. வெந்நீர் பயன்படுத்துகின்றீரா?

வெந்நீர் பயன்படுத்துவதினால் தலை முடி உதிர்வு அதிகரிக்கும் எனவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எண்ணெய் குளியல் போது மட்டுமே வெந்நீரை பயன்படுத்தலாம், அதுவும் எண்ணெய் பிசுக்கினை போக்க மட்டுமே... மற்றபடி தலைமுடிகளுக்கு பாதுகாப்பு அளிக்க எப்போதும் வெந்நீர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

5. ஈரப்பத நிலையில் சீப்பு பயன்படுத்தினால்...

குளித்து முடித்தவுடன் ஈரப்பத்ததுடன் இருக்கும் தலைமுடியில் சீப்பினை பயன்படுத்தினால் பாதிப்பு நம் தலை முடிக்கு தான். இந்த பிரச்சணையினை தவிர்க்க பெரிய பற்கள் கொண்ட சீப்பினை பயன்படுத்தலாம் அல்லது தலையினை நன்கு உலர்ந்து விட்டு பின்னர் சீப்பினை பயன்படுத்தலாம்.

Trending News