பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!

குழந்தைகளுக்கு பாலூட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள் நிச்சயமாக புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுதல் வேண்டும் என ஒரு ஆய்வு தெரவிக்கின்றது.

Updated: Jul 31, 2018, 04:19 PM IST
பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
Representative Image

குழந்தைகளுக்கு பாலூட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள் நிச்சயமாக புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிடுதல் வேண்டும் என ஒரு ஆய்வு தெரவிக்கின்றது.

பிறந்த குழந்தைகளுக்கு பால் ஊட்டும் பருவத்தில் இருக்கும் தாய்மார்கள், புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் கொண்டிருக்கும் பட்சத்தில் அது அவர்களது குழந்தைகளை தான் பாதிக்கும் என ஆய்வின் முடிவு ஒன்று கூறுகிறது.

அமெரிக்கன் அகெடமி ஆம் பீடியாட்ரிக்ஸ் நடத்திய இந்த ஆய்வில் பாலூட்டும் தாய்மார்கள் புகைப்பிடித்தால் அது அவரகளின் குழந்தைகளின் அறிவாற்றல் திறமைகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் தாய்மை அடைந்த பிறகு புகைப்பழக்கத்திற்கு அடிமையாகுவதில்லை., எனினும் புகைபிடிக்கும் பெண்கள் தாய்மை அடைவர் என்பது யதார்த்தம் தானே!..

பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் அவர்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் என்பது அவர்களின் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், தாய்மை பருவத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் கொடுக்கும் பால் குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உன்மை.

புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை என்ற போதிலும் குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் தால் ஊட்டச்சத்து என்பது பல அறிஞர்களின் கூற்று என்னும் போது அந்த தாய்பாலையே விஷமாக மாற்றும் திறமை அந்த தாய்மார்களிடமே உள்ளது. அதனை மாற்றாமல் இருக்க வேண்டும் எனில் பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close