உலகிலேயே விலை அதிகமான பீட்ஸா!! விலை என்ன?

Updated: Nov 9, 2017, 03:15 PM IST
உலகிலேயே விலை அதிகமான பீட்ஸா!! விலை என்ன?
Representational image

இத்தாலி நகரத்தில் ஒரு குறிப்பிட்ட பீட்ஸாவின் விலை 77 லட்ச ரூபாய். உலகின் முக்கிய சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பீட்ஸாவை உருவாக்கி இருக்கிறார்கள். 

உலகிலேயே விலை அதிகமான உணவுப் பொருட்களைப் பற்றி தனியார் உணவு ஆராய்ச்சி நிறுவனம் ஒரு பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில் உலகிலேயே விலை அதிகமான பீட்ஸா ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த பீட்ஸா விலை ரூ. 77 லட்சம். இந்த பீட்ஸாவின் பெயர் ‘லூயிஸ் 13' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். 

இரண்டு பேர் சாப்பிடக்கூடிய இந்த பீட்ஸாவை நீங்கள் வாங்கினால் உலகின் காஸ்ட்லி மதுபானமாக ரெமி மார்ட்டினோடு இது பரிமாறப்படும். இந்த பீட்ஸாவின் அடிப்பாகம் தயாரிக்கப்பட்டு 72 மணிநேரம் பதப்படுத்தப்படும் அதன் பின் அதில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட மிகச்சிறந்த சிக்கன் மற்றும் வாசனைப் பொருட்களோடு இந்த பீட்ஸா தயாரிக்கப்படுகிறது. 

மொத்தம் மூன்று வகைகளில் இந்த பீட்ஸா கிடைக்கும். சிக்கன், மீன் ஆகிய நான் - வெஜ் பீட்ஸாக்களோடு, ஆஸ்திரேலியாவின் முர்ரே நதியில் இருந்து பெறப்படும் பிங்க் நிற உப்போடு காய்கறிகள் நிறைந்த வெஜ் பீட்ஸாவும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.