டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறை கைவிடப்படுமா?

டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையினை கைவிட தீவிரமாக ஆலோசணை நடைப்பெற்று வருகிறது!

Updated: May 17, 2018, 05:22 PM IST
டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறை கைவிடப்படுமா?

டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையினை கைவிட தீவிரமாக ஆலோசணை நடைப்பெற்று வருகிறது!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், முதலில் யார் பேட்டிங் (அ) பவுலிங் செய்ய வேண்டும் என்பதினை தீர்மானிக்க டாஸ் போடும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையானது ஒரு குறிப்பிட அணிக்கு ஒருதலை பட்சமாக அமைகிறது என்னும் ICC டாஸ் போடும் முறையினை கைவிட ஆலோசணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டெஸ்ட் போட்டிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளுக்கு எதிரா இந்த டாஸ் போடும் முறை அமைவதாக தெரிவிக்கும் கிரிக்கெட் வாரியம், போட்டிகளின் போது உள்ளூர் அணிகள், பிட்ச் உள்ளிட்ட சாதக சூழ்நிலைகளை தங்கள் பக்கம் அமைத்துக் கொள்வத குற்றம் சாட்டிவருகிறது.

இதனால் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளின் கைகள் கட்டப்பட்டு விடுகின்றன. எனவே இந்த மரபினை ஒழிக்கும் விதமாக போட்டிகளின் போது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியின் கேப்டன் நேரடியாக தங்களுக்கு பேட்டிங் (அ) பவுலிங் வேண்டும் என தேர்வு செய்து விளையாட பரிசீலனை நடைப்பெற்று வருகிறது.

இந்த திட்டத்தினை வரும் 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெறும் ஆஷஸ் தொடரில் இருந்து கடைப்பிடிக்க ஆலோசணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. அதாவது வரும் ஆஷஸ் தொடரின் போட்டிகளின் போது ஆஸ்திரேலிய கேப்டனே முதலில் பேட்டிங்கா (அ) பவுலிங்கா என்பதினை முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ் முறையை ஒழித்து விட்டால், டீசண்ட்டான பிட்ச்களைப் கிரிக்கெட் வாரியம் போட்டாக வேண்டும் என டேரன் லீ மேன் பரிந்துரை செய்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடக்க முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த யோசனைக்கு ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹோல்டிங், போத்தம், ஷேன் வார்ன் போன்றோரும் ஆதரவு காட்டி வருவதாக தெரிகிறது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close