சத்னா-ரவா வழித்தடத்தில் சென்ற சரக்கு வண்டி தடம்புரண்டு விபத்து!

மும்பை-ஹவுரா வழித்தடத்தில் பிரயாணிக்கும் சரக்கு வண்டியின் 24 பெட்டிகள் தடண்புரன்டு விபத்துக்குள்ளானது!

ANI | Updated: Feb 9, 2018, 11:51 PM IST
சத்னா-ரவா வழித்தடத்தில் சென்ற சரக்கு வண்டி தடம்புரண்டு விபத்து!
Pic Courtesy: @ANI

மத்திய பிரதேஷ்: மும்பை-ஹவுரா வழித்தடத்தில் பிரயாணிக்கும் சரக்கு வண்டியின் 24 பெட்டிகள் தடண்புரன்டு விபத்துக்குள்ளானது!

சத்னா-ரவா பாதையில் சரக்குகளை ஏற்றிச்சென்ற சரக்கு வண்டி திடிரென விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைத்த அதிகாரிகள் சீறமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீறமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சம்மந்தப்பட்ட பாதையில் பயணிக்கும் தொடர் வண்டிகள் மாற்றுப் பாதை வழியாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தினை குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தண்டவாளங்களில் ஏற்பட்டிருந்த பாதிப்பினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்க வாய்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிர் சேதமும் நிகழவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close