மகா சிவராத்திரி வழிபாட்டிற்கு சென்ற 5 பக்தர்கள் பலி!

திருப்பதி யாத்திரை சென்ற பக்தர்கள் 4 பேர் உள்பட 5 பேர் விபத்தில் சிக்கி பலியாகினர்!

PTI | Updated: Feb 13, 2018, 07:35 PM IST
மகா சிவராத்திரி வழிபாட்டிற்கு சென்ற 5 பக்தர்கள் பலி!
File Photo

திருப்பதி: திருப்பதி யாத்திரை சென்ற பக்தர்கள் 4 பேர் உள்பட 5 பேர் விபத்தில் சிக்கி பலியாகினர்!

திருப்பதி தேவஸ்தானத்தில் வழிபாடு செய்ய சென்ற பக்தர்கள், வழியில் ஆட்டோ ரிக்ஷா மூலம் பயணிக்கையில் அசம்பாவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

மகா சிவராத்திரி-யை முன்னிட்டு பிரபல சிவன் கோவிலான காலஹஸ்தியில் வழிபாடு செய்து பின்னர் ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்த பயணிகள் 4 பேர் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவர் என 5 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

கோவிலில் இருந்து சுமார் 45km அடுத்துள்ள GN கண்டிற்கா கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது!

விபத்துக்குள்ளனவர்களில் 2 பெண்கள் உள்ளடங்கும், விபத்தில் சிக்கயவர்களில் அனைவரும் சம்பவயிடத்திலேயே பலியானது வேதனை!