ஜெய்ப்பூர் தீ விபத்து-ஒரு குடும்பத்தில் 5 பேர் பலி!!

ஜெய்ப்பூரில் தீடிரென ஏற்ப்பட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Updated: Jan 13, 2018, 09:50 AM IST
ஜெய்ப்பூர் தீ விபத்து-ஒரு குடும்பத்தில் 5 பேர் பலி!!
ANI

ஜெய்ப்பூரில் தீடிரென ஏற்ப்பட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகர் செக்டர்-9ல் தீடிரென வீட்டின் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை சுமார் 11 மணியளவில் இந்த கட்டிடத்தில் தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 

மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு, அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த, தீ விபத்துக்கான காரணம் பற்றி காவல் துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர்.