சத்தீஸ்கரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் 5 நக்சலைட்டுகலும் இரண்டு போலீசாரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated: Mar 19, 2017, 10:44 AM IST
சத்தீஸ்கரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Zee Media Bureau

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் 5 நக்சலைட்டுகலும் இரண்டு போலீசாரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கடந்த மார்ச் 11-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் பலியானார்கள். 

இந்நிலையில் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பர்டம் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தவுடன் அங்கு விரைந்து சென்ற அதிரடிப்படை போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இத்தாக்குதலில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.