இந்திய நகரங்களில் 52 விழுக்காட்டினர் இருமொழி பேசுவதாக தகவல்...!

இந்தியாவில் நகர்ப்புற இளைஞர்கள் சுமார் 52 விழுக்காட்டினர் இருமொழி பேசுபவர்கள் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது...! 

Updated: Nov 7, 2018, 12:13 PM IST
இந்திய நகரங்களில் 52 விழுக்காட்டினர் இருமொழி பேசுவதாக தகவல்...!
Representational Image

இந்தியாவில் நகர்ப்புற இளைஞர்கள் சுமார் 52 விழுக்காட்டினர் இருமொழி பேசுபவர்கள் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது...! 

இந்தியாவில் நகர்ப்புறத்தில் வாழும் இளைஞர்களில் 52 சதவிகிதத்தினர் இருமொழி பேசுபவர்கள் என்றும், 18 சதவிகித விழுக்காட்டினர் மும்மொழி பேசுபவர்கள் என்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது இனம், மொழி, மதம், வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நகர்ப்புறத்தில் வாழும் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 52 விழுக்காட்டினர் இருமொழி பேசுபவர்கள் என்றும், 18 விழுக்காட்டினர் மும்மொழி பேசுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் கிராமப் பகுதிகளில் 22 % நபர்கள் இருமொழி பேசுபவர்கள் என்றும் 5 % நபர்கள் மும்மொழி பேசுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. நகர்ப்புறத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 44 விழுக்காட்டினர் இருமொழி பேசுபவர்கள். 15 விழுக்காட்டினர் மும்மொழி பேசுபவர்கள்.