ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 6 மாணவர்கள் காயம்!

Last Updated: Wednesday, September 13, 2017 - 14:56
ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 6 மாணவர்கள் காயம்!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் மற்றும் வேன் ஒட்டுனர் காயமடைந்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. 

பாத்தோவில் இருந்து கே.வி. ஸ்கூல், செனானி, கான்வென்ட்டின் மாணவ மாணவிகள் சென்ற வேன், படோவில் மற்றொரு வாகனம் மீது மோதியது.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுனர் முஷ்டாக் அகமது, மற்றும் மாணவர்கள் சிகிச்சைக்காக சமுதாய நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கு முதல் உதவி செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் ஓட்டுனர் முஷ்டாக் அகமது காயம் அதிகமாக இருந்த காரனத்தினால் அவர் ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.