விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அருண் ஜெட்லி!!

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும், இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Updated: Jan 14, 2018, 04:34 PM IST
விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அருண் ஜெட்லி!!
ZeeNewsTamil

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் பேசியது: உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வளர்ச்சியின் பலன்களை பல தரப்பட்ட மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் விவசாய துறையை சார்ந்து உள்ளனர். அத்துறையின் லாபமும், வளர்ச்சியும் தெளிவாக இல்லையென்றால், நாட்டின் வளர்ச்சியை நியாயபடுத்த முடியாது. 

வளர்ச்சியின் பலன்கள் விவசாய துறையை சென்றடைவதும், அத்துறையை உயர்த்துவதுமே அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும். அதிக உற்பத்தி காரணமாக, பல இடங்களில் சில பொருட்களின் விலை வீழ்ச்சியடைகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன் பலன்கள் தெளிவாக தெரிய துவங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் விவசாயிகள் தவறவிடுவதில்லை.உணவுபற்றாக்குறை இருந்த நம் நாட்டில், தற்போது உணவு உற்பத்தி மிகுதியாக உள்ளது. இதனால், விலை குறைந்து வருகிறது. என்று அருண் ஜெட்லி பேசினார்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close