ஜிஎஸ்டி மசோதா அனைத்து கட்சிகளும் ஆதரவு: ஜெட்லி

Last Updated : Aug 8, 2016, 04:40 PM IST
ஜிஎஸ்டி மசோதா அனைத்து கட்சிகளும் ஆதரவு: ஜெட்லி  title=

அ.தி.மு.க., தவிர மற்ற கட்சிகள் ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி., மசோதா சில திருத்தங்களுடன் நிறைவேறியது. இதனையடுத்து திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், வரிகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க ஒரே நாடு ஒரே வரியை கொண்டு வர முயற்சி செய்தோம். அனைத்து கட்சிகளிடமிருந்தும் ஒரு மித்த கருத்தை ஏற்படுத்த அரசு முயற்சி செய்தது. அதிமுக தவிர மற்ற கட்சிகள் ஜி.எஸ்.டி., மசோதாவை ஆதரித்தன. வரைவு அறிக்கையை ஜி.எஸ்.டி., கவுன்சில் தயாரிக்கும். வரி விகிதத்தை நிர்ணயம் செய்யும். மசோதாவால், தேசம் ஒருங்கிணைக்கப்பட்ட சந்தையாக மாறும். நாம் ஒரே நாடு ஒரே வரி முறையை பெற்றிருப்போம்.

இந்த வரியால் பொருட்கள் மற்றும் சேவை பரிமாற்றத்தைில் பிரச்னை இருக்காது. மசோதாவை நடைமுறைப்படுத்த மூன்று மசோதாக்கள் சில தேவைப்படுகின்றன. அவை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதாவால் வரி மீதான வரி நீக்கப்படும் எனக்கூறினார்.

Trending News