அமர்நாத் யாத்திரிகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி அபு இஸ்மாயில் சுட்டுக் கொலை

Updated: Sep 14, 2017, 06:20 PM IST
அமர்நாத் யாத்திரிகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி அபு இஸ்மாயில் சுட்டுக் கொலை
Pic Courtesy : ANI

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அபு இஸ்மாயில் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நொவாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில்   லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார். யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் நடத்திய மற்றொரு பயங்கரவாதியும் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி அபு இஸ்மாயில் அவனது கூட்டாளிகளும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மொத்தம் எட்டு பக்தர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து அபு இஸ்மாயிலை இந்திய பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.