முருக கடவுளுக்கே ஐபோன் 6S கொடுத்த பக்தன்!

ஆந்திராவில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் இறைவனுக்கே ஐபோன் 6S-ஐ காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளார். 

Updated: Mar 12, 2018, 11:49 AM IST
முருக கடவுளுக்கே ஐபோன் 6S கொடுத்த பக்தன்!
ZeeNewsTamil

ஆந்திரா மாநிலம்  கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் தெய்வத்திற்கு ஐபோன் 6S-ஐ காணிக்கையாக உண்டியலில் போட்டுள்ளார். 

இது குறித்து பேசிய கோவில் நிர்வாகத்தினர், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கோவில் உண்டியலை எண்ணுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை, காணிக்கை பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் போது வாரண்டி அட்டையுடன் கூடிய புத்தம் புதிய ஐபோன் s6 ஒன்று இருந்தது, பக்தர் யாரேனும் தவறுதலாக போட்டுவிட்டனரா அல்லது போன் கடை புதியதாக திறப்பவர்கள் யாராவது முதல் போனை காணிக்கையாக செலுத்தி இருக்கலாம் என்று கருதமுடிகிறது.

இந்நிலையில் காணிக்கையாக வந்த போனை கோவில் நிர்வாகத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாமா? அல்லது ஏலம் விட்டு அந்த தொகையை கோவிலின் வங்கிக்கணக்கில் செலுத்திவிடலாமா என்று கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை செய்து வருகின்றனர். 2016 ம் ஆண்டு ஷீரடி சாய் பாபா கோவிலில் 92லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர நெக்லஸ் காணிக்கை பெட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close