இயந்திரங்களுக்கு ஆண் பெண் பேதம் இல்லை - அவனி சதுர்வேதி!

இந்திய போர் விமானம் மிக்-21 பைசன்-னை இன்று மீண்டும் தனியாக ஓட்டி அவனி சதுர்வேதி, மகளிர் தினத்தில் பெண்களை பெருமை படுத்தியுள்ளார்!

Updated: Mar 8, 2018, 08:34 PM IST
இயந்திரங்களுக்கு ஆண் பெண் பேதம் இல்லை - அவனி சதுர்வேதி!
Pic Courtesy: twitter/@ANI

இந்திய போர் விமானம் மிக்-21 பைசன்-னை இன்று மீண்டும் தனியாக ஓட்டி அவனி சதுர்வேதி, மகளிர் தினத்தில் பெண்களை பெருமை படுத்தியுள்ளார்!

கடந்த மாதத்தில். கூகிளில் அதிகம் தேடப்படவர் பட்டியலில் இடம்பெற்றவர் அவனி சதுர்வேதி. இந்தியாவில் போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல கட்ட பயிற்சிக்கு பின் அவர்கள் குழுவாக தேர்வு செய்யப்பட்டு தனியாக விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இதன்படி, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூன்று பெண் விமானிகளுக்கு மிக் -21 பைசன் போர் விமானத்தை தனியாக ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்களில் அவனி சதுரவேது கடந்த ப்பி., 21 அன்று மிக்-21 போர் விமானத்தினை தனியாக ஓட்டி சாதனைப்படைத்தார். இதனால் இந்தியாவில் போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமை படைத்தார். இதனையடுத்து இன்று மீண்டும் தனியாக மிக்-21 பைசன் விமானத்தினை ஓட்டி மகளிர் தினத்தில் பெண்களை பெருமை படுத்தியுள்ளார்.

பணத்திற்கு பின்னர் பேசிய அவர் தெரிவிக்கையில், "ஹிந்தி வழியில் கல்வி கற்ற நான் என் வாழ்கை பயணத்தில் பல பாடம் கற்றேன், குறிப்பாக இந்த விமான பயிற்சி மையத்தில். இயந்திரங்களுக்கு ஆண் பெண் பேதம் கிடையாது, அதை இயக்கும் மனிதர்களுகு இடையில் தான் இந்த பேதங்கள் பார்க்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.