காதல் ஜோடிக்கு அடி உதை கொடுத்து விரட்டிய இந்துத்துவா அமைப்பினர்!

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் முன்புறத்தில் அமர்ந்திருந்த காதல் ஜோடிகளை இந்துத்துவா அமைப்பினர் விரட்டியடித்துள்ளனர். 

Updated: Feb 14, 2018, 01:46 PM IST
காதல் ஜோடிக்கு அடி உதை கொடுத்து விரட்டிய இந்துத்துவா அமைப்பினர்!
ANI

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அகமதாபாத் உள்ள  ஐதராபாத் மாவட்டங்களில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரணியின் ஒரு பகுதியாக அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றின் கடற்கரையில் இருந்த காதல் ஜோடியை இந்துத்துவா அமைப்பினர் துன்புறுத்தி விரட்டியடித்துள்ளனர். 

மேலும் ஐதராபாத்திலும் பஜ்ரங் தள் அமைப்பினர் காதலர் தினத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

காதலர் தினத்துக்கு எதிரான போஸ்டர்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியும், உருவ பொம்மையை எரித்தும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.