மணிப்பூரில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமா பாஜக அரசு?

Updated: Mar 20, 2017, 09:59 AM IST
மணிப்பூரில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமா பாஜக அரசு?
Pic courtsey: PTI

மணிப்பூரில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

நம்பிக்கை ஓட்டெடுப்பு : மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பா.ஜ., 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள் 

ஆதரவு தேவை என்று இருந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்ததால், பா.ஜ.,வின் பலம் 33 ஆக அதிகரித்தது.

பா.ஜ.,வின், பிரேன் சிங் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவியேற்றார். சட்டசபையில் பலத்தை நிரூபிக்க இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. 

இரு கட்சிகளுமே தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.