கொச்சி கப்பல் துறைமுகத்தில் திடீர் விபத்து -மீட்புபணி தீவிரம்!

கொச்சி கப்பல் துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேர் இச்சம்பவத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

Updated: Feb 13, 2018, 01:43 PM IST
கொச்சி கப்பல் துறைமுகத்தில் திடீர் விபத்து -மீட்புபணி தீவிரம்!

கொச்சி கப்பல் துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேர் இச்சம்பவத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தானது, புஷ்வான் பகுதியில் Oil and Natural Gas Corporation (ONGC) நிறுவனத்தின் Mobile Offshore Drilling Unit (MODU)-ல் நடைப்பெற்றுள்ளது.

விபத்து நடைப்பெற்ற போது, சம்பந்தப்பட்ட கப்பல் துறைமுகத்தினில் சீரமைப்பு பணி நிகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விஷயம் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொன்டுச் சென்றனர்.

கொச்சி கப்பல் துறைமாகமானது, பழுதுபார்க்கும் வசதிகளை கொண்ட, இந்தியாவின் முதன்மையான கப்பல் துறைமுகமாகும். 

(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது...)