ராகுல் காந்தியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்!

Last Updated : Feb 23, 2018, 08:57 PM IST
ராகுல் காந்தியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு! title=

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்!

இந்தியாவில் தன் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று டெல்லி வந்தடைந்தார். இந்த பயணத்தில் முன்னதாக தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். பின்னர், குஜராதில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். 

அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். 

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த  ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி வரவேற்றார். இதனையடுத்து இன்று மாலை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜஸ்டின் ட்ரூடோ புதுடெல்லியில் சந்தித்து பேசினார்.  

இச்சந்திப்பின் போது ஜஸ்டின் ட்ரூடோ, சோனியா காந்தி அவர்களின் உடல் நலம் குறித்து ராகுல் காந்தியிடம் விசாரித்ததாக தெரிகிறது!

Trending News