கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு

Updated: May 19, 2017, 12:16 PM IST
கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு
Pic courtesy: Twitter

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்துள்ளனர். 

மும்பையைச் சேர்ந்த ஐஎன்எஸ் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர்முகர்ஜி ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என சிபிஐ பதிவு செய்து உள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.  

அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் சென்னை வீடு உள்பட 14 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 

இந்நிலையில், நேற்று அதிகாலை பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தில், கார்த்தி சிதம்பரம், தன் நண்பர்கள் மூன்று பேருடன், பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். அவர் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவது, சிபிஐ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.